குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்
ராமநாதபுரம் : கீழக்கரை குறுவட்டார அளவிலான தடகளப்போட்டிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. தடகளப்போட்டிகளை மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார். 14, 17, 19 வயது பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், குண்டு, தட்டு எறிதல், நீளம் தாண்டுல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடந்தது. ஏற்பாடுகளை திருப்புல்லாணி எஸ்.எஸ். ஏ.எம்., அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ், பி.டி.ஏ., தலைவர் ராஜேந்திரன், எஸ்.எம்.சி., தலைவர் யசோதா முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் ஜாகிர்உசேன் ஆகியோர் செய்தனர். இன்று மாணவிகளுக்கான தடகளப்போட்டிகள் நடைபெற உள்ளது.