மேலும் செய்திகள்
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
20-May-2025
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் இருந்து தேவிப்பட்டினம்செல்லும் சாலையில் கேணிக்கரை சந்திப்பு உள்ளது. ராமநாதபுரம் நகைக்கடை தெரு வழியாக செல்லும் ரோடு கேணிக்கரை சந்திப்பில் சேர்கிறது. கேணிக்கரை சந்திப்பில் இருந்து ஓம்சக்தி நகர் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இதில் வாகனங்கள் அதிகளவில் செல்லும் பகுதியாகும். கேணிக்கரை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீசாரால் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகள் இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த சிக்கனல் செயல்படாததால் வாகனங்கள் கட்டுப்பாடின்றி சந்திப்பில் செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சிக்னலை செயல்படுத்த போக்குவரத்து போலீஸ் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20-May-2025