உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவாடானை; திருவாடானை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் இரண்டு நாட்கள் நடந்தது. மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ஆரோக்கியசாமி, பாண்டிஸ்வரி மற்றும் 92 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். எந்த பாடத்தில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர், மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துதல், மாணவர்களிடம் புதிய திறன்களை வளர்த்தல் போன்ற பல பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி நிறுவன மாவட்ட ஆசிரியர் பாரதிராஜா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை