சிறுதானிய உணவு திருவிழா
உத்தரகோசமங்கை: -உத்தரகோசமங்கை அருகே பனைக்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் சிறுதானிய இயற்கை உணவு விழிப்புணர்வு ஏற்படுத்த உணவு திருவிழா நடந்தது.தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். திருப்புல்லாணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டியராஜன், செல்வகுமார், எஸ்.எம்.சி., தலைவர் திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.உதவி ஆசிரியர் ஷீலா தேவி வரவேற்றார். சிறு குறு தானியங்களில் உணவு பதார்த்தங்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.