கோழிக்கூண்டில் பிடிபட்ட பாம்பு
சாயல்குடி : சாயல்குடி அருகே ராசிக்குளம் கிராமத்தில் விவசாயி விஜயகுமார் என்பவரது வீட்டில் உள்ள கோழிக்கூண்டில் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இருந்தது.சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் பாம்பு பிடிக்க உதவும் கருவி மூலம் பாம்பை பாதுகாப்பாக பிடித்து மீட்டனர்.சாயல்குடி வனச்சரக அலுவலகத்தில் பாம்பு ஒப்படைக்கப்பட்ட நிலையில் வனச்சர அலுவலர்கள் பாம்பினை சாயல்குடி வனப்பகுதியில் விட்டனர்.