உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்வள அட்டை விழிப்புணர்வு

மண்வள அட்டை விழிப்புணர்வு

பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் கருத்தனேந்தல் கிராமத்தில் மண்வள அட்டை விழிப்புணர்வு முகாம் நடந்தது.அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு நாகராஜன் பங்கேற்றார். அவர் பேசுகையில் மண்வள அட்டையில் மண்ணில் உள்ள பேரூட்டம், நுண்ணுாட்டம், சுண்ணாம்பு சத்துக்கள், உப்பு, கார, அமில அளவுகளை சமன் செய்யும் வழிமுறைகள், மண்ணில் உள்ள சத்துக்கள், எந்த பயிர் சாகுபடி செய்யலாம் என தெரிந்து கொள்ள முடியும் என்றார்.துணை வேளாண் அலுவலர் வித்யாசாகர் பேசுகையில் ரசாயன உரங்கள் இடுவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படும். பூச்சி நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்றார்.போகலூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜேந்திரன், உதவி வேளாண் அலுவலர் பாசமலர், அட்மா திட்ட உதவி மேலாளர் சந்திரகுரு மற்றும் கருத்தனேந்தல் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ