உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்று சோலார் பேனல்; விழிப்புணர்வு முகாம்

இன்று சோலார் பேனல்; விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம்; ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள வசந்தம் மகாலில் 'பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டம்' குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று (அக்.,8) காலை 11:00 மணிக்கு நடக்கிறது. மின் நுகர்வோர்கள், சூரிய மின்சார அமைப்பின் மூலம் பயனடைந்தவர்கள், சோலார் நிறுவுபவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் சோலார் பேனல் அமைப்பின் நன்மைகள், பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டத்திற்கு விண்ணப்பிப்பது, வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர் இதில் கலந்து கொள்ளலாம் என ராமநாதபுரம் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ