உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மடை மக்களுடன் எஸ்.பி., சந்தீஷ் ஆலோசனை

ஆர்.எஸ்.மடை மக்களுடன் எஸ்.பி., சந்தீஷ் ஆலோசனை

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் ஆர்.எஸ்.மடை பகுதி மக்களுடன் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை நடத்தினார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில் 'உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி.,' என்ற திட்டத்தில் ஆர்.எஸ்.மடை கிராமத்தில் நேரில் பார்வையிட்டு அங்குள்ள மக்கள் மற்றும் முக்கிய தலைவர்கள், இளைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார்.அப்போது கிராமத்தில் நிலவும் சமூக சூழ்நிலை, பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஆகியவற்றை கவனமாக கேட்டு தீர்வுக்கான வழிமுறைகள் குறித்து பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !