உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர  திருத்த பணி: கலெக்டர் ஆய்வு 

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர  திருத்த பணி: கலெக்டர் ஆய்வு 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதி நகரில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவத்தை ஓட்டுச்சாவடி நிலை அலுலவர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி வருவதை நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர்களிடம் படிவம் பூர்த்தி செய்வதன் விவரம் குறித்து கேட்டறிந்ததுடன், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் முழுமையாக கேட்டறிந்து பூர்த்தி செய்து மீண்டும் வழங்க வேண்டும். மாவட்டத்தில், ராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடனை, முதுகுளத்துார் ஆகிய சட்டசபை தொகுதிகளிலும் 5,99,183 ஆண்கள், 6,09,441 பெண்கள், 66 திருநங்கைகள் என 12,08,690 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் இரட்டை பிரதிகள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்த படிவங்களை பெறுவதற்கான் பணிகள் நடந்து வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி