உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆடி செவ்வாய் சிறப்பு பூஜை

ஆடி செவ்வாய் சிறப்பு பூஜை

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சந்தாங்கியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி செவ்வாய்க்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு 11 வகை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். மாவிளக்கு எடுத்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப் பட்டது. தாம்பூல பொருட்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பஞ்சந்தாங்கி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை