உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் முருகன் கோயில்களில் திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம் முருகன் கோயில்களில் திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம் : திருக்கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம், வழிபாடு, அன்னதானம் நடந்தது.ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் காலை, மாலை பூஜையில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் அலங்கார தீபாராதனை நடந்தது.வடக்கு தெரு பாலசுப்பிரமணியர் சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், குமரய்யா கோயில், வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணியம் சுவாமி, பாலதண்டயுதபாணி சுவாமி கோயில், பெருவயல் ரெணபலி முருகன் கோயில், பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலகம் அருகே வினைதீர்க்கும் வேலவர், நீச்சல்குளம் அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அபிேஷகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தி சொற்பொழிவு, கோயில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் திருவிளக்குகளை ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.* கீழக்கரை தட்டான் தோப்பு தெரு வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோயில் முன்புறம் பரணி தீபம் ஏற்றப்பட்டது. நேற்று மாலை 6:00 மணிக்கு வழிகாட்டி பாலமுருகன் கோயில் விமான கூரை அருகே 36 அடி உயரம் கொண்ட இரும்பு பீடத்தில் 100 கிலோ நெய், 15 கிலோ நுால் திரி, 10 கிலோ சூடம் உள்ளிட்டவற்றை கொண்டு 3 நாட்களுக்கு மிகாமல் எரியும் வகையில் தீபம் ஏற்றப்பட்டது.பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹிந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை