புள்ளிமான் பலி
திருவாடானை:திருவாடானை அருகே பனஞ்சாயல் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் இரண்டு வயதுள்ள ஒரு பெண் புள்ளிமான் இறந்து கிடந்தது. அக்கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நாய்கள் விரட்டி கடித்ததில் மான் இறந்திருக்கலாம். மான் உடலில் ஆங்காங்கே சிறு காயங்கள் இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.