உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடி கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் கைது

தனுஷ்கோடி கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் :இன்ஜின் பழுதாகி தத்தளித்த இலங்கை மீனவர்கள் இருவரை, கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இலங்கை புத்தளம் அருகே கல்பட்டியா கடற்கரையில் இருந்து சுமித் ஜெயரூபன், 42, சுரங்கர், 40, ஆகியோர் நேற்று முன்தினம் பைபர் கிளாஸ் படகில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய - இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது, திடீரென இன்ஜின் பழுதாகி படகை இயக்க முடியாமல் போனது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். நேற்று காலை தனுஷ்கோடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கியூ பிரிவு போலீசார் அவர்களை கைது செய்து, இவர்களுடன் கடத்தல்காரர்கள் தனுஷ்கோடிக்குள் ஊடுருவினரா என விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது எல்லை தாண்டியதாக வழக்கு பதிவு செய்து நேற்று இரவு சென்னைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இன்று, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப் படவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை