நண்பனுக்கு கத்திக்குத்து
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி மேல் கரைப் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் கண்ணன் 33. கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் இவரும், ஆர்.எஸ்.மங்கலம் தர்மர் கோயில் பகுதியைச் சேர்ந்த சசி குமார் மகன் அஜய் கார்த்திக் 21, இருவரும் நண்பர்கள். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி உள்ளனர். இதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் தங்களது வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில், ராஜேஷ் கண்ணன் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் ராஜேஷ் கண்ணன் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்ற அஜய் கார்த்திக் ராஜேஷ் கண்ணனை கத்தி யால் குத்தினார். இதில் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காய மடைந்த ராஜேஷ் கண்ணன் ராமநாதபுரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரில், அஜய் கார்த்திக் மற்றும் தப்பி ஓடிய அவரது நண்பர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் அஜய் கார்த்திக்கை கைது செய்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல் கிஷான் விசாரித்து வருகிறார்.