உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சொத்து தகராறில் கத்திக்குத்து: கைது 3

சொத்து தகராறில் கத்திக்குத்து: கைது 3

கமுதி: கமுதி அருகே ராமசாமிபட்டியை சேர்ந்தவர் சண்முகவேல் 50. இவரது சகோதரி குருவம்மாள் 55. இருவரிடையே சொத்து தகராறு இருந்து வந்தது.இதுகுறித்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குருவம்மாள், கணவர் நாகராஜ், மகன் ராஜ் ஆகியோர் சண்முகவேல், அவர் மனைவி நாகஜோதியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.இருவரும் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கமுதி போலீஸ் எஸ்.ஐ.,சக்திவேல் கணேஷ் வழக்கு பதிந்து குருவம்மாள் 55, நாகராஜ் 59, ராஜ் 39, ஆகிய மூவரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ