உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை

மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் தொழில் நுட்பக் பணியாளர் பற்றாக்குறையால் நோயாளிகள் தவிக்கின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் நான்கு பேர் பணியாற்றுகின்றனர். இதில் ஒருவர் மட்டுமே நிரந்தர பணியாளர் மற்ற 3 பேரும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள.எக்ஸ்ரே பிரிவில் தற்கால தொழில் நுட்பமான டிஜிட்டல் எக்ஸ்ரே, நகரும் எக்ஸ்ரே இயந்திரங்கள் என அதி நவீன வசதிகள் கொண்டிருந்தாலும் 24 மணி நேரமும் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. சாரசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 80 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது. பணிச்சுமையால் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எக்ஸ்ரே எடுப்பதற்காக வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கூடுதல் தொழில் நுட்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ