உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எஸ்.பி.பட்டினத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்

எஸ்.பி.பட்டினத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தொண்டி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தொண்டி அருகே எஸ்.பி. பட்டினத்தில் நேற்று உங் களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் ஊராட்சியில் செப்..16 ல் எஸ்.பி.பட்டினம், புல்லக்கடம்பன், கலியநகரி ஆகிய ஊராட்சி களுக்கு கலியநகரி சேவை மையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. எஸ்.பி.பட்டினத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பல்வேறு பிரச்னைகளை இப்பகுதி மக்கள் சந்திப்பதால், உங்களுடன் ஸ்டாலின் முகாமை எஸ்.பி.பட்டினத்தில் தனியாக நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று எஸ்.பி.பட்டினத்தில் உங் களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. பொதுமக்களிடமிருந்து 143 மனுக்கள் பெறப்பட்டன. திருவாடானை தாசில்தார் ஆண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(திட்டம்) விஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கியமேரிசாராள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆதார் அட்டைகள் தொடர்பான சேவை அலுவலர்கள் கலந்து கொள்ளாததால் ஆதார் பதிவு செய்தல், புதுப்பித்தல், முகவரி மாற்றுதல் செய்ய முடியவில்லை. அதே போல் மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர்கள் கலந்து கொள்ளாததால் காப்பீட்டு திட்டத்தில் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க முடியவில்லை என முன்னாள் மாணவர் சேவை சங்கத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை