உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குமரக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

குமரக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பரமக்குடி; பரமக்குடி ஒன்றியம் வேந்தோணி ஊராட்சி குமரக்குடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பங்கேற்றார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை சரிபார்த்து உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. மேலும் முகாமின் நோக்கம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இதில் பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவணப்பெருமாள், பி.டி.ஓ., முத்துராமலிங்கம் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். * இதேபோல் பரமக் குடி நகராட்சி 9 மற்றும் 10வது வார்டுகளில் நடந்த முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பெயர் மாற்றம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்ப்பு காணப்பட்டது. இதில் தாசில்தார் வரதன், வருவாய் அலுவலர் வெங்கிடகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை