உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காப்பு கட்டுதல் துவக்கம்

காப்பு கட்டுதல் துவக்கம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் சீலைக்காரி அம்மன் கோயில் பங்குனி களரி உற்ஸவ விழா நடைபெற உள்ளது. இதையடுத்து சீலைக்காரி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாரதனை நடந்தது. கோயில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது.பால்குடம், அக்னிசட்டி எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். ஏப்.,5ல் பால்குடம்,அக்னிசட்டி, விளக்கு பூஜை, ஏப்.6ல் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை