உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில அளவிலான கால்பந்து போட்டி

மாநில அளவிலான கால்பந்து போட்டி

தொண்டி: தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி செய்யது முகமது கான்சாகிப் திடலில் நடந்தது. முன்னாள் விளையாட்டு வீரர்கள் சாதிக்பாட்ஷா, நவ்பல் ஆதம் மற்றும் பலர் துவக்கி வைத்தனர். தொண்டி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், பனைக்குளம், பெரியபட்டினம், மேலக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், காரைக்குடி, ராமேஸ்வரம், இளையாங்குடி ஆகிய ஊர்களிலிருந்து 32 கால்பந்து குழுவினர் கலந்து கொண்டனர். இதில் பெரியபட்டினம் குழுவினர் முதலாவதாகவும், காரைக்குடி குழுவினர் இரண்டாவதாகவும், ராமேஸ்வரம் குழுவினர் மூன்றாவதாகவும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு விழாக்குழு சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ