சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
தொண்டி : தொண்டி அருகே மீனவ குடியிருப்பை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், 21 வயது வாலிபருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் வரும் ஜனவரியில் திருமணம் நடக்க இருந்தது. தகவல் கிடைத்த திருவாடானை வருவாய்த்துறை அலுவலர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்றும், 18 வயது பூர்த்தியானால் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதன்பின் சிறுமியின் பெற்றோர்களிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி பெறபட்டது. அதனை தொடர்ந்து சிறுமி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டார்.