வைகையில் காட்சி பொருளான தெரு விளக்குகள்: மக்கள் அவதி
கீழக்கரை: கீழக்கரை அருகே குளபதம் ஊராட்சிக்குட்பட்ட வைகை கிராமத்தில் கடந்த 8 மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் காட்சி பொருளாகவே உள்ளதால் இருட்டில் வெளியே வந்துசெல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.வைகை கிராமத்தில் ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரும் நிலையில் மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் அலைபேசியின் வெளிச்சத்தில் பயணிக்க வேண்டி உள்ளது. விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை, எனவே திருப்புல்லாணி பி.டி.ஓ., மற்றும் தனி அலுவலர்கள் தெருவிளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.