உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது கண்டித்து இன்று ஸ்டிரைக்

3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது கண்டித்து இன்று ஸ்டிரைக்

ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன்பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரையும், ஒரு படகையும் இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து சென்றனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(மார்ச் 19)ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.கச்சத்தீவு திருவிழாவையொட்டி 5 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கென்னடியின் விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர்.படகில் இருந்த மீனவர்கள் சங்கர் 53, அர்ச்சுனன் 35, முருகேசன் 49, ஆகியோரை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீன்வளத்துறையினர் வழக்கு பதிந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இன்று மீனவர்கள் ஸ்டிரைக்

இதனை கண்டித்து நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி இன்று (மார்ச் 19) வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இலங்கையில் மீனவர்களின் தொடர் போராட்டத்தால் அந்நாட்டு கடற்படையினர் எல்லை தாண்டி வருவதாக தமிழக மீனவர்களை கைது செய்கின்றனர். எனவே நம் மீனவர்கள் இலங்கை பகுதிக்குள் செல்லாமல் நம் எல்லைக்குள் மீன்பிடித்து விட்டு கரை திரும்ப வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ