உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரியில் சேர போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த மாணவர் கைது

எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரியில் சேர போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த மாணவர் கைது

ராமநாதபுரம்: போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து ராமநாதபுரம் எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரியில் சேர முயன்ற ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் அபிேஷக்கை 22, போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரத்தில் செயல்படும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரியில் சேர நேற்றுமுன்தினம் ஹிமாச்சல் பிரதேசம் மண்டி மாவட்டம் கங்கோத்தி நமேலை பகுதியைச் சேர்ந்த மாணவர் அபிேஷக், தந்தை மகேந்திரசிங்குடன் 48, வந்தார். அக்.,19ல் மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் மீண்டும் மருத்துவக்கல்லுாரியில் சேர வந்துள்ளதால் அவர் மீது சந்தேகமடைந்த நிர்வாகத்தினர் 'நீட்' மதிப்பெண் சான்றிதழை சரி பார்த்தனர். அது போலிச்சான்றிதழ் என தெரியவந்தது.இதுகுறித்து கேணிக்கரை போலீஸில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி பேராசிரியர்களுக்கான பொறுப்பு அதிகாரி டாக்டர் கணேஷ்பாபு புகார் செய்தார். விசாரணையில் மகேந்திரசிங் 48, பம்பு ஆப்பரேட்டராக பணிபுரிகிறார். அபிேஷக் ஹரியானா மாநிலத்தில் பள்ளி படிப்பினை முடித்து இரு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. மூன்றாவது முறையாக தேர்வு எழுதியுள்ளார். அதில் 720 க்கு 60மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் சான்றிதழை திருத்தம் செய்து போலிச்சான்றிதழ் தயாரித்து தந்தையையும், குடும்பத்தினரையும் ஏமாற்றி எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரியில் சேர வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அபிேஷக்கை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ