உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிக்கலில் சேதமடைந்த மாணவர் விடுதி

சிக்கலில் சேதமடைந்த மாணவர் விடுதி

சிக்கல் : சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே தொட்டியபட்டி செல்லும் வழியில் சமூகநீதி மாணவர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விடுதி கட்டடம் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. விடுதியின் பின்பகுதி சமையல் கூடம் மற்றும் கழிப்பறை வளாகங்களில் சிமென்ட் பூச்சுகள் அனைத்தும் உதிர்ந்து செங்கல் வெளியே தெரிகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மாணவர் விடுதிக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் மழைக்காலங்களில் ஒழுகுதல் உள்ளிட்ட பிரச்னை இருக்காது என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ