தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் பங்களிப்பு அவசியம்
ராமநாதபுரம்: அறிவி யல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இன்றைய மாணவர்கள் பங்களிப்பு அவசியம் என மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ராஜசேகரன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் 2024--2025 ல் பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ராஜ சேகரன் தலைமை வகித்தார். சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் கண்ணன் முன்னிலை வகித்தார். ராஜசேகரன் பேசியதாவது: அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சிக்கு அப்துல் கலாம் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொறியியல் கல்லுாரி மாணவர்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்றார். 5 துறைகளை சேர்ந்த 91 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது. கல்லுாரி ஆண்டறிக்கையை டீன் உதயகுமார் வாசித்தார். துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் சென்னை அண்ணா பல்கலை கண்ணன், ராமநாதபுரம் மணிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.