உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சத்துணவு வழங்க தாமதம் சோர்வடையும் மாணவர்கள்

சத்துணவு வழங்க தாமதம் சோர்வடையும் மாணவர்கள்

திருவாடானை: பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மதிய உணவு கிடைக்காததால் மாணவர்கள் சோர்வடைகின்றனர்.வறுமையில் வாடும் கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கல்வியையும், உணவையும் ஒரு சேர வழங்கும் வகையில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒன்று முதல் 10 ம் வகுப்பு வரை மதிய உணவு வழங்கப்படுகிறது. திருவாடானை தாலுகாவில் உள்ள 27 அரசுப்பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஒரு மையத்தை கவனித்து வந்த சத்துணவு அமைப்பாளர் நான்கு அல்லது ஐந்து மையங்களிலும் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் ஒரு பள்ளியில் சமைத்து மற்றொரு பள்ளிக்கு உணவு கொண்டு செல்ல காலதாமதம் ஆவதால் மாணவர்கள் சோர்வடைகின்றனர். கோவனி சத்துணவு மையத்தில் சமைக்கப்படும் உணவு, ஆதியாகுடி, கருமொழி பள்ளிகளுக்கும், ஆதியூரில் சமைக்கப்படும் உணவு கருப்பூர் பள்ளிக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதே போல் பல பள்ளிகளுக்கு காலதாமதமாக உணவு கிடைப்பதால் மாணவர்கள் சோர்வடைகின்றனர். இது குறித்து ஆதியாகுடி மக்கள் கூறுகையில், இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மதியம் 2:00 மணிக்கு மேல் உணவு வழங்குவதால் சோர்வடைகின்றனர். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய் விடுகிறது. ஆகவே காலியாக உள்ள சத்துணவு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை