மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
28-Mar-2025
திருவாடானை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்) ஆண்டு தோறும் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கடந்த பிப்.22 ல் நடந்தது. இதில் திருவாடானை தாலுகாவில் குருமிலான்குடி அரவிந்த்வெர்சன், ரோசினி, முள்ளிமுனை முகுந்தன், பழங்குளம் ஐஸ்வர்யா, தினையத்துார் கார்த்திகா, கொடிப்பங்கு அபினேஸ்வரி ஆகியோர் தேர்வு பெற்றனர். இது குறித்து திருவாடானை வட்டார கல்வி அலுவலர்கள் புல்லாணி, ஆரோக்கியராஜ் கூறியதாவது: தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும். பிளஸ் 2 படித்து முடிக்கும் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்றனர். தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டினர்.
28-Mar-2025