மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் போதை பொருட்கள் தடுப்பு குழு சார்பில் 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற வகையில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் பொறுப்பு சிவகுமார் தலைமை வகித்தார். துணை கலெக்டர் பயிற்சி கோகுல் சிங், மதுரை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன், திருவாடானை அரசு கல்லுாரி போதை பொருட்கள் தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், தாசில்தார் சாந்தி, தமிழ் துறை தலைவர் மணிமாறன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், கோட்ட ஆய அலுவலர் சிக்கந்தர் பபிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.அப்போது போதையில்லா தமிழகம் உருவாக்கும் வகையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். உடற்கல்வி இயக்குனர் பிரசாத் தொகுத்தார். போதை பொருள் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.