நெல் மணியில் அ எழுதி பள்ளியில் சேர்ந்த மாணவர்கள்
ராமநாதபுரம்: விஜயதசமியை முன்னிட்டு ராமநாதபுரம் அரசுப் பள்ளி, தனியார் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை (வித்யாரம்பம்) நடந்தது. பழங்கால முறைப்படி நெல், அரிசி யில் 'அ' எழுதி கல்வி கற்றலை ஆசிரியர்கள் துவக்கி வைத்தனர். நேற்று விஜயதசமியை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி களில் மாணவர்கள் சேர்க்கை நடந்தது. ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., குழந்தைகளுக்கு மாலை அணிவித்து நெல் மணியில் 'அ' எழுதியும், கல்வி கற்றலை துவக்கி வைத்தனர். இதே போல நகராட்சி, ஊராட்சி துவக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை சந்தனம், குங்கும், இனிப்பு வழங்கி வரவேற்றனர். பழங்கால முறைப்படி நெல், அரிசியில் 'அ' எழுத வைத்து மாணவர் சேர்க்கை நடந்தது.