உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  இலவச சைக்கிள்களை தள்ளிச்சென்ற மாணவர்கள்

 இலவச சைக்கிள்களை தள்ளிச்சென்ற மாணவர்கள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்களின் டயர்களில் காற்றில்லாததால் 2 கி.மீ., சைக்கிளை தள்ளிச் சென்றனர். முதுகுளத்துார் தாலுகாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முதுகுளத்துஆர் தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளில் ஒரு சில பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. முதுகுளத்துஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்களின் டயரில் காற்றில்லாததால் மாணவர்கள் ஓட்டிச் செல்ல முடியாமல் தள்ளிக் கொண்டு சென்றனர். முழுமையாக சரி செய்யாமல் வழங்கப்படுவதால் பணம் செலவு செய்து சைக்கிளை சரிபார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து இலவச சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கும் போது முழுமையாக சரி செய்து காற்றடித்து வழங்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை