உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தரமில்லாத பேவர் பிளாக் சாலை : கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை

தரமில்லாத பேவர் பிளாக் சாலை : கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை

தொண்டி; தொண்டியில் தர மில்லாமல் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலைகளை பொறி யாளர்கள் ஆய்வுக்கு பின் கான்ட்ராக்டர் மீது நட வடிக்கை எடுக்க பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தொண்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் ஷாஜகான்பானு தலைமையில் நடந்தது. துணை தலைவர் அழகுராணி, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தொண்டியில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தில் 2021-22ல் பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தில் 2024-25ன் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இச்சாலை பணிகள் தரமில்லாமல் அமைக்கப்படுவதாகவும், மழை நீர் தேங்காத வண்ணம் அமைக்காமல் மழை நீர் தேங்கி பொதுமக் களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்ட கான்ட்ரக்டருக்கு பணிகள் வழங்காதவரும், அரசு விதிமுறைகளின்படி அரசு பொறியாளர்கள் மூலம் சாலைகளின் தரம் ஆய்வு செய்து, அவர் களின் அறிக்கை பெற்று அந்த கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூாட்சி அலு வலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட இருக்கும் இடம் புறம்போக்கு ரஸ்தா என வகைப்படுத்தபட்டுள்ள நிலமாக உள்ளது. எனவே அந்த இடத்தை பேரூ ராட்சிக்கு நில உரிமை மாற்றம் செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை