உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேறும் சகதியுமான ரோட்டால் அவதி

சேறும் சகதியுமான ரோட்டால் அவதி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே உலையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மீசல், உலையூர், முத்துசெல்லாபுரம், முத்துவிஜயபுரம் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு ரோட்டில் இருந்து 200 மீ.,ல் அரசு பள்ளி கட்டடம் உள்ளது. கடந்த சில மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்லும் வழியில் குறிப்பிட்ட துாரம் மட்டும் புதிதாக பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டது. மீதமுள்ள துாரம் மணல் தரையாக உள்ளது. தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மழை பெய்கிறது. பள்ளிக்கு செல்லும் ரோடு சேறும் சகதியுமாக மாறி உள்ளதால் நடக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். டூவீலர், சைக்கிளில் செல்வதற்கே முகம் சுளிக்கின்றனர். சில மாணவர்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது. எனவே பள்ளிக்கு செல்லும் பாதையில் முழுமையாக பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ