மேலும் செய்திகள்
மரவள்ளி விலை சரிவு விவசாயிகள் கவலை
28-Oct-2025
ராமநாதபுரம்: பருவ மழை பெய்து வருவதால் ராமநாதபுரத்திற்கு வெளியூர்களிலிருந்து மரவள்ளி, சர்க்கரைவள்ளி கிழங்குகள் வரத்து குறைவால் விலை கிலோவுக்கு ரூ.20 வரை அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் அம்மா பூங்கா பகுதியில் ஒவ்வொரு புதன்தோறும் வாரச்சந்தை நடக்கிறது. வெளியூர்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் டன் கணக்கில் விற்பனை நடக்கிறது. ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் இருந்து மக்கள் அதிகளவில் குவிகின்றனர். தற்போது பருவ மழை பெய்து வருவதால் சந்தைக்கு காய்கறி, பழங்கள் வரத்து குறைந்து விலையும் கூடியது. குறிப்பாக மரவள்ளி, சர்க்கரைவள்ளி கிழங்குகள் வரத்து குறைந்து கடந்த வாரம் கிலோ ரூ.30க்கு விற்ற மரவள்ளி ரூ.50க்கும், கிலோ ரூ.60 விற்ற சர்க்கரைவள்ளி ரூ.80க்கும் விற்கிறது. விலை உயர்ந்த போதும் சத்துள்ள கிழங்குகள் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.
28-Oct-2025