தற்கொலை
தொண்டி: தொண்டி காந்திநகரை சேர்ந்தவர் வீரமணி 40. திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். குடும்பத் தகராறில் மனமுடைந்த வீரமணி தீக்குளித்தார். காயமடைந்தவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வீரமணி இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.