மேலும் செய்திகள்
கோடை மழை: மிளகாய் விவசாயிகள் வேதனை
21-Mar-2025
கடலாடி: கடலாடி தாலுகா கிடாத்திருக்கை, கொண்டுலாவி உள்ளிட்ட பகுதிகளில் 800 ஏக்கருக்கும் அதிகமாக சம்பா மிளகாய் எனப்படும் குச்சி மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் விளைச்சலுக்கு வந்த நிலையில் பெருவாரியான சம்பா மிளகாய் சோடை மிளகாயாக மாறியது.இதனால் விவசாயிகள் பெருந்தொகை செலவழித்து போட்ட தொகையை எடுக்க முடியாத வேதனையில் உள்ளனர். கிடாத்திருக்கையை சேர்ந்த இயற்கை விவசாயி வடிவேலு கூறியதாவது: சமீபத்தில் பெய்த கோடை மழையால் குச்சி மிளகாய் எனப்படும் சம்பா மிளகாய் பாதிக்கப்பட்டுள்ளது. சோடை எனப்படும் நோய் தாக்குதலுக்குள்ளாகி நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்துள்ளனர்.ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்தும் எதிர்பார்த்த பலன் இல்லாததால் சிரமத்தை சந்தித்து வருகிறோம்.நடப்பு ஆண்டில் மிளகாய் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கடலாடி வருவாய் துறையினர் மற்றும் தோட்டக்கலை துறையினர் கிராமங்களில் உரிய முறையில் ஆய்வு செய்து சோடை மிளகாய் பாதிப்பை சந்தித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
21-Mar-2025