மேலும் செய்திகள்
விழுப்புரம்-ராமேஸ்வரம் கோடை ரயிலுக்கு வாய்ப்பு
14-Apr-2025
விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்
08-May-2025
பரமக்குடி: பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் அதிக வருமானம் தரும் நிலையில் கோடை கால சிறப்பு ரயிலுக்கு நிறுத்தம் வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தற்போது கோடை காலம் துவங்கிய நிலையில் விழுப்புரம், ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் வாரம் 4 முறை இயக்கப்படுகிறது. இது விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 4:15 மணிக்கு புறப்பட்டு 11:45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து 2:35 மணிக்கு புறப்பட்டு இரவு 10:35 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. இந்த ரயிலில் 9 முன்பதில்லா பெட்டிகள், 4 முன்பதிவு இருக்கை வசதி, ஒரு மூன்றாம் வகுப்பு ஏ.சி., பெட்டி என உள்ளது. மேலும் திருச்சி, மதுரை வழியாக இயக்கப்படும் நிலையில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்படாமல் உள்ளது.மூன்று பாசஞ்சர் ரயில்கள் செல்லும் நிலையில், ஒவ்வொன்றிலும் பயணிகள் இட வசதியின்றி கூட்ட நெரிசலில் நின்று செல்கின்றனர்.இதேபோல் மூன்று சென்னை ரயில்களிலும் தினந்தோறும் அதிகளவு காத்திருப்பு பட்டியல் உள்ளது.தொடர்ந்து வருடத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் பரமக்குடி ஸ்டேஷன் வருமானம் ஈட்டி தருகிறது.தற்போது கோடை விடுமுறை மற்றும் பரமக்குடி சித்திரை திருவிழா என மக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். 500 கி.மீ.,க்கு குறைவான துாரம் பயணிக்கும் இந்த ரயிலுக்கு நிறுத்தம் வழங்கப்படாமல் உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் மெயின் லைனில் ஒரு நிமிடம் மட்டும் நிறுத்தி சென்றாலும் மக்கள் அதிகளவு பயனடைவர். ஆகவே ரயில்வே நிர்வாகம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொது அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14-Apr-2025
08-May-2025