முத்துப்பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள்
இன்று ஆடி தேரோட்டம்பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஆக.,1 காலை கருடாழ்வார் கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. நேற்று காலை முத்துப் பல்லக்கில் தவழும் கண்ணனாக நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் வெண்ணெய் உண்டபடி அலங்காரமாகினார். முக்கிய வீதிகளில் வலம் வந்த பெருமாளுக்கு பக்தர்கள் வெண்ணெய், நெய் படைத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். பின்னர் மதியம் வைகை ஆற்று மண்டகப்படியில் எழுந்தருளினார். இரவு 12:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி ஆற்றில் இருந்து புறப்பட்டு காலை 5:00 மணிக்கு கோயிலை அடைந்தார். இன்று காலை ஆடி தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.