சூப்பர் ரிப்போர்டர்..
எரியாத மின்விளக்கு ராமநாதபுரத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் மின் விளக்குகள் அடிக்கடி பழுதாகி இருள் சூழ்ந்து விடுகிறது. எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மாதவன், ராமநாதபுரம். பன்றிகளால் தொல்லை ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோட்டில் குறுக்கே வரும் பன்றிகளால் விபத்து அபாயம் உள்ளது. பன்றி வளர்ப்போரை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முகமது மீரான், புதுநகர். குப்பையால் துர்நாற்றம் ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை வ.உ.சி., நகரில் குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். - சிவா, சக்கரகோட்டை நாய்கள் தொல்லை ராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் நாய்களின் தொல்லையால் இரவில் நடந்து செல்ல முடியவில்லை. அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். - முஸ்தபா, சின்னக்கடை வீதி .