உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாயிகளுக்கு பருத்தி விதைகள் வழங்கல்

விவசாயிகளுக்கு பருத்தி விதைகள் வழங்கல்

கமுதி: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அதானி சோலார் மின் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் செங்கப்படை மற்றும் ஊ.கரிசல்குளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பருத்தி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை அதிகாரி வினோத் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குநர் சிவராணி, ஊ.கரிசல்குளம் ஊராட்சி தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தனர். செங்கப்படை, ஊ.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள 500 விவசாயிகளுக்கு பருத்தி விதைகள் வழங்கப்பட்டது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்முறை விளக்கம், பயன்கள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டது. உடன் வி.ஏ.ஓ., சித்ராதேவி உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரி ஜனார்த்தனன் உட்பட நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ