உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா

அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் பிப்., முதல் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கம்ப்யூட்டர் உபகரணங்கள் பொருத்தும் பணி நடக்கிறது.ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தும் வகையில் பெரிய அளவிலான ஸ்கிரீன் வகுப்பறையில் பொருத்தப்பட்டுள்ளது.ஐந்து அடி அகலமும் 3 அடி உயரம் கொண்ட பெரிய எல்.இ.டி., ஸ்கிரீனில் மாணவர்கள் தங்கள் கைப்படவே எழுதுவதற்கான தொடுதிரையில் பிரத்தியேக பேனா உதவியுடன் எழுவதற்கு பழக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.தொடக்கக் கல்வி சார்ந்த அனைத்து பாடங்களையும் எல்.இ.டி., திரையில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் ஸ்பீக்கருடன் பொருத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு தொடக்கப் பள்ளியிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள எல்.இ.டி., டிஸ்ப்ளே மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளை சென்னையில் உள்ள தலைமையிடத்தில் இருந்து கண்காணிப்பதற்காக ரிமோட் சி.சி.டி.வி., கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.பெற்றோர் கூறியதாவது: தனியார் பள்ளியில் அதிகளவு மாணவர்கள் சேருகின்றனர். எனவே அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனவே அதிக விலை மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை பாதுகாக்கும் வண்ணம் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி