உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வரத்துகால்வாய்களை சீரமைக்க கணிப்பாய்வு அலுவலர் உத்தரவு

வரத்துகால்வாய்களை சீரமைக்க கணிப்பாய்வு அலுவலர் உத்தரவு

ராமநாதபுரம்: மழைக்காலத்தில் அனைத்து வரத்துக் கால்வாய்களை சீரமைத்து நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் வள்ளலார் உத்தரவிட்டுள்ளார்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் மாநில கடல்சார் வாரியம் துணைத்தலைவர், தலைமைச்செயல் அலுவலர் வள்ளலார் முன்னிலை வகித்தார். அவர் கூறியதாவது:நகர், உள்ளாட்சி அமைப்புகளில் காலி இடங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லுாரிகளில் நீர் தேங்காமல் இருக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தேங்கிய தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும்.வைகை ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை வீணாக்காமல் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நிரம்பும் வகையில் பாதைகளை கண்டறிந்து சரி செய்திட வேண்டும் என்றார்.எஸ்.பி., சந்தீஷ், கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர், பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை