பாம்பனில் துாக்கு பாலத்தை இயக்கி சோதனை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை வெற்றிகரமாக நடந்தது. பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தை ஏப்., 6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலத்தை திறந்து மூடும் போது அடிக்கடி சிக்கல் ஏற்பட்டதால் சில மாதங்கள் பாலம் திறக்கப்படாமல் அதனை சரி செய்யும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் அக்.,6ல் துாக்கு பாலம் திறக்கப்பட்டு கப்பல், படகுகள் கடந்து சென்ற பின் மீண்டும் மூடப்பட்டது. அப்போது எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து நேற்று மீண்டும் துாக்கு பாலம் திறந்து மூடப்பட்டது. இச்சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.