உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / துாய்மை பாரத இயக்கம்  விழிப்புணர்வு ஊர்வலம் 

துாய்மை பாரத இயக்கம்  விழிப்புணர்வு ஊர்வலம் 

ராமநாதபுரம் -ராமநாதபுரத்தில் மதுரைஎய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி மாணவர்கள்துாய்மை பாரத இயக்கம் சார்பில் துாய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் உள்ள மதுரை எய்ம்ஸ் மாணவர்கள், துாய்மை பாரத இயக்கம் சார்பில் துாய்மையை வலியுறுத்தி அலுவலர்கள், பேராசிரியர்களுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஹனுமந்தராவ் தலைமை வகித்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.துாய்மையை வலியுறுத்திய பதாகைகளை ஏந்திய எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி மாணவர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் நடத்திய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ