ராமேஸ்வரத்தில் சுவாமி சூரனை வதம் செய்தார்
ராமேஸ்வரம்: சூரசம்ஹாரத்தையொட்டி ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் முருக கடவுள் சூரனை வதம் செய்தார். நேற்று சூரசம்ஹாரத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து தங்க கேடயத்தில் ஸ்ரீ முருகன், வள்ளி, தெய்வானையுடன் புறப்பாடாகி கோயில் வடக்கு ரத வீதியில் எழுந்தருளினர். பின் அங்கிருந்த சூரனை சுவாமி முருகன் அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நடத்த சூரசம்ஹாரம் விமரிசையாக நடந்தது. பின் சுவாமி முருகப்பெருமானுக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு கோயில் மேலவாசலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.