உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுயம்புலிங்க துர்்கை அம்மன் ஆடி கொடை விழா

சுயம்புலிங்க துர்்கை அம்மன் ஆடி கொடை விழா

கமுதி : கமுதி அருகே அபிராமம் சாந்த கணபதி கோயிலில் உள்ள சுயம்புலிங்க துர்கை அம்மனுக்கு 35ம் ஆண்டு ஆடி கொடை விழா முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்புபூஜை தீபாரதனை நடந்தது. கோயில் வளாகத்தில் 108 விளக்குபூஜை நடந்தது. பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், அக்னிச்சட்டி, கரகம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து பூக்குழி இறங்கினர். சுயம்புலிங்க துர்கை அம்மனுக்கு 108 புஷ்ப அர்ச்சனை தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அபிராமம் அதனை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் அம்மன் வீதி உலா வந்தார், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை