பரமக்குடியில் ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தார் எச்சரிக்கை தினமலர் செய்தி எதிரொலி
பரமக்குடி: பரமக்குடியில் ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையானதால் சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜன.21ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் துவங்கி பெரிய பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை கட்டுவோர் ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர். இதே போல் தெருக்களில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யும் நிலை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த மாதங்களில் சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி ஆய்வு நடத்தினார். இதனை சுட்டிக்காட்டி ஜன. 21ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.தொடர்ந்து நேற்று மாலை 5:00 மணிக்கு தாசில்தார் சாந்தி தலைமையிலான வருவாய்த் துறையினர் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு செய்திருந்த வியாபாரிகளை எச்சரித்தனர். இச்சூழலில் வரும் நாட்களில் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆவண செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.