உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழ்நாடு விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்துார்:முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மயில்வாகனன், மாவட்ட துணை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். போர்வெல் மூலம் விவசாய நிலத்தில் தண்ணீர் எடுக்கும் விவசாயி மீது வரி போடுவதை கண்டித்தும், இயற்கை பேரிடர் காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும், பருத்தியை மத்திய அரசு காட்டன் கார்ப்பரேஷன் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை