புத்தக திருவிழாவில் மயங்கிய ஆசிரியர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புத்தக திருவிழா நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாணவர்களை அழைத்து வந்த அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதி நேர ஓவிய ஆசிரியர் மங்கள ஜோதி குமார் சுட்டெரித்த வெயிலில் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.அருகில் இருந்த சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அவருக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ்சில் ஏற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதை தொடர்ந்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.