உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆசிரியர் தினவிழா கண் சிகிச்சை முகாம் 

ஆசிரியர் தினவிழா கண் சிகிச்சை முகாம் 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சேதுபதி லயன்ஸ் சங்கம் சார்பில் ராஜா தினகர் ஆர்.சி., உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம், அன்னை தெரசா தினம், கண் சிகிச்சை முகாம் நடந்தது. சேதுபதி லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். ஆர்.சி., பள்ளிகள் தாளாளர் சிங்கராயர் வரவேற்றார். தலைவர் சிவராஜ் முன்னிலை வகித்தார். தலா 5 பேருக்கு நல்லாசிரியர் விருது, சிறந்த செவிலியர் விருது வழங்கப்பட்டது. இருவருக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்க வட்டார தலைவர் கோபி, சேதுபதி லயன்ஸ் சங்க பொருளாளர் ஜெயராஜ் பங்கேற்றனர். கண்சிகிச்சை முகாம் ஏற்பாடுகளை கிருஷ்ணன்கோவில் சங்கரா கண்ஒளி மையத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை